திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (18:06 IST)

ஊறுகாய்க்காக அடித்துக் கொண்ட நண்பர்கள்… இறுதியில் நடந்த விபரீதம்!

கோவையில் ஒரே அறையில் தங்கி இருந்த நண்பர்கள் ஊறுகாய்க்காக சண்டை போட்டுக் கொண்டபோது அதில் ஒருவர் பலியாகியுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேடு பகுதியில் சித்து குமார் என்ற 17 வயது சிறுவன், பிரஜங்கி குமார் உள்ளிட்ட நான்கு நண்பர்கள் ஒரே அறையில் தங்கி வந்துள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்த இவர்கள் நேற்று மதியம் உணவு சாப்பிட எல்லோரும் வந்த நிலையில் நேற்று மதியம் சாப்பிட வந்துள்ளனர்.

அறையில் குழம்பு இல்லாததால் சித்துகுமார் பிரஜங்கி குமாரிடம் ஊறுகாய் கேட்டுள்ளார்.  ஆனால் கொடுக்க மறுத்த அவரிடம் சித்து சண்டை போட ஆரம்பித்துள்ளார். சண்டை உச்சகட்டத்தை எட்ட பிரஜங்கி குமார், சித்து குமாரை கழுத்தை நெறித்தும் எட்டி உதைத்து விட்டு அறையை விட்டு சென்றுள்ளார். ஆனால் சித்து மயக்கமடையவே அவரை மருத்துவமனையில் சேர்க்க, மருத்துவர்கள் அவர் ஏற்கனவெ உயிரிழந்து விட்டதாக சொல்லியுள்ளனர்.

இது சம்மந்தமாக வழக்குப் பதிவு செய்து பீளமேடு காவல்துறையினர் பிரஜங்கி குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.