ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: செவ்வாய், 18 மே 2021 (22:47 IST)

பசுமைக்குடி தன்னார்வ அமைப்பினர் வழங்கிய இலவச முகக்கவசங்கள்

கொரோனா இரண்டாம் அலை தீவிரம் மீண்டும் களமிறங்கிய பசுமைக்குடி தன்னார்வ அமைப்பினர்
 
 
பசுமைக்குடி தன்னார்வ அமைப்பின் சார்பில் மீண்டும் அனைவருக்கும் இலவச முகக்கவசங்கள் மற்றும் கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நான்காவது கட்டமாக துவக்கம்
 
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி வருவதோடு, உயிர்பலிகளையும் வாங்கி வருகின்றது. மத்திய மற்றும் மாநில அரசுகள் எவ்வளவு திட்டங்கள் தீட்டினாலும், கொரோனா பெருந்தொற்று பரவும் விதம் குறைவதில்லை,. இந்நிலையில்., ஆங்காங்கே அரசியல் கட்சியினரும் சில களத்தில் இறங்கி சீறிய நடவடிக்கை எடுத்து வருவதோடு, கரூர் மாவட்டத்தில் பசுமைக்குடி என்கின்ற தன்னார்வ அமைப்பினர் இன்று முதல் மீண்டும் கொரோனா இரண்டாம் அலைக்கு எதிரான பணிகளை முனைப்புடன் செய்து வருகின்றனர்.
 
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், வரவணை கிராமம் வ. வேப்பங்குடியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் சமூக இடைவெளியுடன் இன்று பசுமைக்குடி தன்னார்வ இயக்கம் மூலம் கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பசுமைக்குடி தன்னார்வ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நரேந்திரன் ஆலோசனையின் கீழ், தன்னார்வலர்கள் காளிமுத்து, வேல்முருகன், கவிநேசன், குணசேகரன், வெற்றிவேல், மனோஜ் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவருக்கும் இலவசமாக கபசுர குடிநீர் மற்றும் இலவச முகக்கவசங்கள் அனைத்தையும் வழங்கினார்கள். ஏற்கனவே கொரோனா முதல் அலையில் மட்டும் இரண்டு முறை இதே போல, இலவச முகக்கவசங்கள் மற்றும் இலவச கபசுர குடிநீர் வழங்கியதை தொடர்ந்து இன்று இரண்டாவது கொரோனா அலையில் நான்காவது துவக்கமாக இந்த திட்டத்தினை பசுமைக்குடி தன்னார்வ அமைப்பினர் துவக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.