திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (20:32 IST)

நிச்சயமாக உபயோகமாக இருக்கும்! அரிய வாய்ப்பு! பயன்பெறுங்கள்!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கோவை மற்றும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் இலவச சான்றிதழ் படிப்புகள்.


 


கரும்பு, பருத்தி, தென்னை, மூலிகை, மலர்கள் சாகுபடி, தோட்டக்கலை பயிர் நாற்றங்கால் தொழில் நுட்பம். காளான், தேனீ, பட்டுப்புழு வளர்ப்பு, பழம் காய்கறிகள் பதப்படுத்தல். பண்ணைக்கருவி, இயந்திரம் பராமரிப்பு, திடக்கழிவு மறுசுழற்சி, மண்புழு உரம் தயாரிப்பு, அங்க மேலாண்மை, நவீன பாசன மேலாண்மை, பேக்கரி, மிட்டாய், சாக்லேட் தயாரிப்பு, ஆகிய 12 சான்றிதழ் பயிற்சிகளுக்கு ( 6 மாத படிப்பு) பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற வாழப்பாடி பெரியார் பயிற்சி மையத்தில் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.

சேர்க்கைக்கு இறுதி நாள். 08.09.2016, ஆறாம் வகுப்புக்கு மேல் படித்த தமிழில் எழுத படிக்க தெரிந்த 18-40 வயதுக்குட்பட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம். பதிவுக்கட்டணமாக 50/- ரூபாய் செலுத்த வேண்டும். சேர்க்கையின் போது, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ -2, ஆதார் அல்லது ரேசன்கார்டு நகல்-2 கொண்டு வரவும். மாதம் ஒரு விடுமுறை நாளில் மட்டுமே வகுப்பு.  வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சான்றிதழை பதிவு செய்து கொள்ளலாம். சேர்க்கை விபரங்களுக்கு, “பெரியார் பயிற்சி மையம். வாழப்பாடி”. 9600969118, 9443273922.