ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 26 ஜூலை 2024 (14:10 IST)

தமிழகத்தில் i-Pad-களை தயாரிக்க Foxconn நிறுவனம் முடிவு..!

Foxconn
ஐபோன்களை தொடர்ந்து ஐபேட்களும் தயாரிக்க தமிழகத்தில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் பாக்ஸ்கான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில்  ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.
 
இந்நிலையில் ஐபோன்களை தொடர்ந்து ஐ-பேட்களையும் இந்த ஆலையில் இருந்து தயாரிக்க பாக்ஸ்கான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 2 ஆண்டுகளில் ஆலையின் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
 
அதன்படி, ஆப்பிள் நிறுவன இதர தயாரிப்புகளையும் தமிழகத்திலேயே உற்பத்தி செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதே சமயம் மேக் மடிக்கணினிகளை உற்பத்தி செய்யும் திட்டம்  தற்போது இல்லை என பாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது.


ஐபேட்களை தயாரிக்கும் முடிவால் கணிசமான வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என தமிழக அரசின் தொழில்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.