1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 5 பிப்ரவரி 2023 (09:40 IST)

தமிழகத்தில் இன்று 4 முக்கிய ரயில்கள் ரத்து.. என்ன காரணம்?

Train
தமிழகத்தில் இன்று 4 முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதை அடுத்து இந்த வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன மற்றும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
1. ஈரோடு - மேட்டூர் அணை எக்ஸ்பிரஸ் மற்றும் மேட்டூர் அணை - ஈரோடு எக்ஸ்பிரஸ் ஆகியவை பிப்ரவரி 5,6,8 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது 
 
2. பெங்களூர் - காரைக்கால் எக்ஸ்பிரஸ் மற்றும் காரைக்கால் - பெங்களூர் எக்ஸ்பிரஸ் வரும் 11ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது
 
3. சேலம் - யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் 5, 6, 8 ஆகிய தேதிகளில் சேலம் ஓமலூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.
 
4. பெங்களூர்  - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் வரும் 11ஆம் தேதி ஓசூர் தர்மபுரி வழித்தடத்திற்கு பதிலாக கிருஷ்ணராஜபுரம் பங்காருபேட்டை திருப்பத்தூர் சேலம் வழியாக இயக்கப்படுகிறது. ஆலப்புழா தன்பாத் எக்ஸ்பிரஸ் வரும் 11ஆம் தேதி ஆலப்புழாவில் காலை 6 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 1.30 மணிக்கு புறப்படும். எர்ணாகுளம் - பெங்களூர் எக்ஸ்பிரஸ் வரும் 11ஆம் தேதி காலை 9 10 மணிக்கு பதிலாக மதியம் ஒரு மணிக்கு புறப்படும்.
 
Edited by Siva