1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Updated : சனி, 31 ஆகஸ்ட் 2019 (21:20 IST)

இரு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில் அடையாளம் தெரியாத 2 நபர்கள் உட்பட 4 பேர் பலி

கரூர் மாவட்டத்தில் இரு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில் அடையாளம் தெரியாத 2 நபர்கள் உட்பட 4 பேர் பலி – 7 பேர் படுகாயம்  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில்   போலிஸார் விசாரணை செய்துவருகின்றனர்.

சேலம் மாவட்டம், பள்ளபட்டியை சேர்ந்தவர்கள் பழனி செல்வதற்க்காக மினி ஆட்டோவில் 8 பேர்  சென்றனர். கரூர் கோவை நோக்கி சென்று கொண்டிருந்த லாடி அபொபோது கரூர் மாவட்டம்  தென்னிலையடுத்த வைரமடை பகுதியில் நிலை தடுமாறி லாரியும் மினி ஆட்டோவும் நேருக்கு நேர் மீதிக்கொண்டது.  இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே லாரியில் வந்த குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் காயம் அடைந்த 7 பேர் கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் இதில் மினி ஆட்டோவில் பயணம் விக்னேஷ் ( 19), செய்த சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தென்னிலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் க.பரமத்தி மற்றும் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம், மோதிய விபத்தில் இருவர் பலியானார்கள் இது குறித்து சம்பந்தப்பட்ட காவல் சரகத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இறந்தவர்களின் உடல்களை கரூர் அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள உடற்க்கூறு ஆய்வகத்தில் வைக்கப்பட்டுள்ளது.