1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Video taken by selfie passenger who crashed into plane

விமானம் கடலில் விழுந்ததை செல்பி எடுத்த விமானி- வைரலாகும் வீடியோ

selfie
அமெரிக்கா நாட்டில் உள்ள சான்பிரான்சிஸ்கோவில் ஒரு சிறிய ரக விமானம் ஒன்று கடலுக்குள் விழுந்தது. அப்போது தாங்கள் விமானத்துடன் கடலுக்குள் விழுந்துவிட்டோம் என விமான பயணிகள் இன்ஸ்டாகிராமில் இதை வீடியோவாக பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகிவருகிறது.
அமெரிக்கா நாட்டில் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தில் சிலர் சிறிய ரகவிமானத்தில் வானில் பயணித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் விமானம் கடலுக்குள் விழுந்தது. விமானத்தில் இருந்த விமானி மற்றும் பயணிகளும் கடலில் விழுந்தனர்.

பின்னர் இவர்கள் விழுந்தது பற்றி அமெரிக்க மீட்புப்படை இவர்களை காற்பாற்ற விரைந்தது.

அப்போது தாங்கள் கடலில் விழுந்தது முதல் மீட்புப்படை மீட்கப்பட்டது வரை அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து அதை பயணிகள் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். தற்போது இது வைரலாகிவருகிறது. 
அடுத்த கட்டுரையில்
ஆதாரையும் இந்த அரசையும் வெறுக்கின்றேன்: சகோதரியை இழந்த ஒரு பெண்ணின் கண்ணீர் டுவீட்!