ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 24 மே 2019 (06:55 IST)

மக்களவை தேர்தல்: வாரிசு வேட்பாளர்களின் வெற்றியும் தோல்வியும்!

எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் அரசியல் பிரமுகர்களின் வாரிசுகள் களத்தில் இறங்கினர். இந்த வாரிசு வேட்பாளர்களின் வெற்றி குறித்து தற்போது பார்ப்போம்
 
தூத்துகுடி தொகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜனை தோற்கடித்து முதல்முறையாக மக்களவைக்கு செல்கிறார்
 
சிவகெங்கை தொகுதியில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றுள்ளார். இவர் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை தோற்கடித்துள்ளார்.
 
அதேபோல் தேனி தொகுதியில் துணைமுதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார், ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் தங்கத்தமிழ்செல்வன் என இரண்டு பெரிய தலைகளை வென்று முதல்முறையாக பாராளுமன்றம் செல்கிறார்.
 
முன்னாள் அமைச்சர் முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன் மத்திய சென்னை தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் எம்பி ஆகியுள்ளார். 
 
மேலும் ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி வீராசாமி வடசென்னை தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இவர் தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜை தோற்கடித்து எம்பி ஆகியுள்ளார்.
 
தென்சென்னை தொகுதியில் முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகள் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்றுள்ளார். 
 
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி மகன் விஷ்ணுபிரசாத் ஆரணி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். 
 
அதேபோல் தமிழக அமைச்சர் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன் தென்சென்னை தொகுதியில் தோல்வி அடைந்தார்
 
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மகன் அன்புமணி தருமபுரி தொகுதியில் தோல்வி அடைந்தார்.
 
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ், கள்ளக்குறிச்சி தொகுதியில் தோல்வி அடைந்தார்.