வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 23 நவம்பர் 2024 (15:16 IST)

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கு இடம் வழங்கிய விவசாயிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரை நேரில் அழைத்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி இன்று பனையூர் தவெக அலுவலகத்தில் நடந்து வருகிறது.

சில மணி நேரங்களுக்கு முன் பனையூர் தவெக  அலுவலகம் வந்தடைந்த விஜய் விவசாயிகளின் குடும்பத்தினர் மட்டுமல்லாமல், மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் மற்றும் மாநாட்டிற்கு பணியாற்றிய நிர்வாகிகளையும் நேரில் அழைத்து மரியாதை செய்து வருகிறார்.

மேலும் தவெக மாநாட்டை சிறப்பாக நடத்த உறுதுணையாக இருந்த விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி மற்றும் நிகழ்ச்சி Contractor விஸ்வநாதன் ஆகியோருக்கு தங்க மோதிரம் வழங்கி விஜய் கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக   அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி என்ற இடத்தில் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது.  இந்த மாநாட்டிற்காக அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலத்தை அளித்த நிலையில், அந்த விவசாயிகளுக்கும் நில உரிமையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று விழா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Mahendran