ஓபிஎஸ் மகன் முதல்வரை சந்தித்ததை ஏற்று கொள்ள முடியாது: வளர்மதி
ஓபிஎஸ் மகன் முதல்வரை சந்தித்ததை ஏற்று கொள்ள முடியாது: வளர்மதி
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மகன் ரவீந்திரநாத் முதல்வரை சந்தித்த ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக ஓபிஎஸ் ஈபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கும் நிலையில் ஒற்றை தலைமையை கைப்பற்ற எடப்பாடிபழனிசாமி தீவிரமாக உள்ளார் என்பதும், அதை தடுக்க ஓபிஎஸ் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் வளர்மதி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது தொகுதி வளர்ச்சிக்காக ஓபிஎஸ் மகன் ரவிந்திரநாத் முதல்வரை சந்தித்த கூறுவதை ஏற்க முடியாது என்றும் திமுகவை பாராட்டிய ஏற்கனவே ஓபிஎஸ் பேசி உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.