ஓபிஎஸ் பிரச்சாரத்திற்கு வர தேவையில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்..!
ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு ஓபிஎஸ் வர தேவையில்லை என்றும் அவருக்கும் கட்சிக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அதிமுக பிரமுகர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் பிரச்சாரத்துக்கு அழைக்கப்படவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், ஓபிஎஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்களுக்கும் அதிமுகவுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்றும் எனவே ஓபிஎஸ் பிரச்சாரத்துக்கு வர வேண்டிய அவசியம் இல்லை என்றும் எங்கள் கட்சியில் பிரச்சாரத்திற்கு தேவையான ஆட்கள் இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
Edited by Mahendran