திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 பிப்ரவரி 2023 (11:06 IST)

அதிமுக தேர்தல் அலுவலகத்திற்கு சீல்! ராணுவப்படையினர் குவிப்பு! – ஈரோட்டில் பரபரப்பு!

Erode election
ஈரோட்டில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியிலிருந்து தென்னரசு போட்டியிடுகிறார்.

இதற்காக ஈரோடு கிழக்கு தொகுதியில் கட்சியினர் தேர்தல் அலுவலகங்கள் அமைத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவின் தேர்தல் அலுவலகம் கல்யாணசுந்தரம் வீதி அருகே அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அலுவலகம் அனுமதியின்றி அங்கு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

அதனால் அதிமுக அலுவலகத்தை சீல் வைக்க தேர்தல் அதிகாரிகள் தற்போது சென்றுள்ளனர். கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட கூடும் என்பதால் துணை ராணுவப்படையினர் சகிதம் அதிகாரிகள் சென்றுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

Edit by Prasanth.K