1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 26 பிப்ரவரி 2024 (11:57 IST)

விபத்தில் முன்னாள் எம்எல்ஏ பலி.! மனைவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி..!

Accident
திருவள்ளூர் அருகே நடந்த சாலை விபத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் பரிதாபமாக பலியானார். படுகாயம் அடைந்த அவரது மனைவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
1991 முதல் 1996 வரை பொன்னேரி முன்னாள் அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர் ரவிக்குமார். அவரது மனைவி நிர்மலா திண்டுக்கல் முன்னாள் அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர்.
 
இந்நிலையில் இருவரும் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சீமாவரம் சுங்கச்சாவடி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில்  ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். 
 
அவரது மனைவி  நிர்மலா பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், பலத்த காயமடைந்த நிர்மலாவை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரிசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான ரவிக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 
இந்த விபத்து தொடர்பாக மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.