1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 31 டிசம்பர் 2024 (10:24 IST)

சென்னை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி.. தொடங்கும் தேதி அறிவிப்பு..!

Flower
ஊட்டியில் ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவிலும் மலர் கண்காட்சி நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஜனவரி 2ஆம் தேதி சென்னை பூங்காவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் கண்காட்சியை பார்வையிடுகிறார்.

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே 8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட செம்மொழி பூங்கா, 2010ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். இந்த பூங்காவில் 800 வகையான செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

ஊட்டியில் நடைபெறும் மலர் கண்காட்சி போன்று, செம்மொழி பூங்காவிலும் மலர் கண்காட்சி நடத்தப்பட இருக்கிறது. ஜனவரி 2ஆம் தேதி தொடங்கும் இந்த மலர் கண்காட்சியில் பூத்துக் குலுங்கும் மலர்களுடன் பல விதமான மலர்கள் வைக்கப்படும். இதை லட்சக்கணக்கான மக்கள் கண்டு களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெற்ற போது மக்கள் கொடுத்த உற்சாக வரவேற்பு காரணமாகவே, தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை இந்த ஆண்டும் மலர் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. ஜனவரி 2ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை இந்த மலர் கண்காட்சி நடைபெறும். காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.

பெரியவர்களுக்கு ரூ.150 மற்றும் சிறியவர்களுக்கு ரூ.75 கட்டணம் நிர்ணயம் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் சுமார் 800 வகையான விதவிதமான செடிகள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Edited by Mahendran