பட்டாசு கடையில் தீ விபத்து! 5 பேர் பலி ! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு பட்டாசுக் கடையில் தீ விபத்தால் படுகாயம் அடைந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.
வரும் நவம்பர் மாதம் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில் , தமிழகத்தில் இதற்கான பட்டாசு விற்பனை நடந்து வருகிறது. இன்று கள்ளக்குறிச்சி சங்கராபுரம் பகுதியில் உள்ள ஒரு பட்டாசுக் கடையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில், 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், ஒருவர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரத்தில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக ஐவர் உயிரிழந்தனர் என அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சமும்; தீவிர சிகிச்சையில் இருப்போருக்கு தலா ரூ.1 லட்சமும் #CMRF நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.