திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 12 ஜூன் 2023 (13:27 IST)

மும்பை தாராவியில் தீ விபத்து...32 பேர் காயம்...

Fire
மும்பை தாராவியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்த 32 பேர் காயமடைந்தனர்.

மஹாராஷ்டிர மாநிலம் தாராவி 90 அடி சாலையில் 7 மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது.  நேற்று காலை 11 மணியளவில் இந்தக் கட்டிடத்தின் மின் மீட்டர் பெட்டிகள் வைக்கும்  இடத்தில் தீப்பிடித்தது.

அப்போது, தீப்பிடித்து கரும்புகை வெளியேறியது. இதைப் பார்த்த கட்டிடத்தில் குடியிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்து,வெளியே ஓடிவந்தனர்.

இதுகுறித்தது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அத்துடன், தீக்காயமடைந்து, மூச்சு திணறலால் பாதிக்கப்பட 32 பேரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும், கட்டிடத்தில் சிக்கியிருந்த 70 பேரை பத்திரமாக மீட்டனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.