செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 17 அக்டோபர் 2017 (09:25 IST)

சென்னை தி.நகர் ரெங்கநாதன் தெருவில் தீ விபத்து

தீபாவளி நாளை கொண்டாடவிருக்கும் நேரத்தில் புத்தாடை உள்ளிட்ட பொருட்களை வாங்க ஏராளமான பொதுமக்கள் சென்னை தி.நகரில் உள்ள ரெங்கநாதன் தெருவில் குவிந்து வருகின்றனர்.



 
 
இடநெருக்கடியான இந்த இடத்தில் இன்று அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தெருவில் உள்ள முன்னணி ஜவுளிக்கடை ஒன்றில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கியிருக்கும் விடுதியில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 
 
ஊழியர்களுக்கு இன்று காலை உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீவிபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் தி.நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் சிறிது நேரத்தில் தீயை கட்டுப்படுத்தியதாகவும் தெரிகிறது. இந்த தீவிபத்தால் உயிரிழப்பு மற்றும் பொருள் இழப்பு எதுவும் இல்லை என்பது ஒரு ஆறுதலான விஷயம்