வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 6 ஏப்ரல் 2019 (09:53 IST)

8 வழிச்சாலை வழக்கு: உயர்நீதிமன்றத்தில் 8ந் தேதி தீர்ப்பு!!!

8 வழி சாலை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் 8ந்தேதி தீர்ப்பு வெளியாக உள்ளது
சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதும் அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வந்தது. இதனை எதிர்த்து விவசாயிகளும், மக்களும், தனியார் தொண்டி நிறுவனங்களும் நீதிமன்றங்களை நாடினர்.  சிலர் மனவேதனையில் தற்கொலையும் செய்துகொண்டனர். இதனையடுத்து மத்திய அரசு இந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக தெரிவித்தது.
 
இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 8ந் தேதி வெளியாக இருக்கிறது.