வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 14 மே 2024 (12:45 IST)

யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் காவல்துறையினர் சோதனை.. முக்கிய ஆவணங்கள் சிக்கியதா?

சவுக்கு சங்கரின் சர்ச்சைக்குரிய பேட்டியை ஒளிபரப்பியதாக பெலிக்ஸ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் டெல்லியில்  கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருடைய வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுக்கு சங்கர் வழக்கில் பெலிக்ஸ் சேர்க்கப்பட்ட நிலையில் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவர் டெல்லியில் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து சமீபத்தில் திருச்சிக்கு அழைத்து வரப்பட்டார் என்பதும் அதன் பிறகு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து பெலிக்ஸை 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து திருச்சி மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.  இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பெலிக்ஸ் வீடு மற்றும் அலுவலகத்தில் திருச்சி போலீசார் இன்று சோதனை செய்து வருகின்றனர்.

சவுக்கு சங்கரின் அவதூறு பேட்டி குறித்து ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் ஆகியவை இருக்கிறதா என்று தேடுதல் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran