செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 13 மே 2024 (08:38 IST)

சென்னைக்கு அழைத்து வரப்பட்ட யூடியூபர் பெலிக்ஸ்.. போலீசார் தீவிர விசாரணை..!

டெல்லியில் கைது செய்யப்பட்டால் யூடியூபர் பெலிக்ஸ் சென்னைக்கு அழைத்து வரப்பட்டதாகவும் இதனை அடுத்து திருச்சி அழைத்து செல்லப்பட்டு அங்கு விசாரணை செய்ய காவல்துறையினர் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் இருக்கும் சவுக்கு சங்கர் அவதூறு பேட்டியை ஒளிபரப்பிய  பெலிக்ஸ் டெல்லியில் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அவர் டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் அழைத்து வரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது

இதனை அடுத்து சென்னையில் இருந்து வேன் மூலம் அவர் திருச்சி அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் திருச்சியில் போலீசார் அவரிடம் விசாரணை செய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது

யூடியூப் என்ற ஒரு அம்சம் வந்த பிறகுதான் அவதூறு பேட்டிகள் ஒளிபரப்பாக வருவது அதிகரித்து வருகிறது என்றும் இதை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே சமூக ஆர்வலர்கள் கூறிவரும் நிலையில் ஒரு சில நெறியாளர்கள் , நடுநிலையாளர் என்ற பெயரில் அவதூறு கேள்விகளை கேட்டு வருவதாக குற்றம் காட்டப்படுகிறது

இந்த நிலையில் நேற்று பெலிக்ஸ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்படும் என்றும் அவருக்கு இருக்கும் சொத்துக்கள் எப்படி வந்தது என்பது குறித்த விசாரணையும் நடைபெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva