செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 6 அக்டோபர் 2022 (18:27 IST)

மனைவி நடத்தையில் சந்தேகம்: 8 வயது குழந்தையை கொலை செய்த தந்தை கைது!

murder
மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் எட்டு வயது குழந்தையை கொலை செய்த தந்தை மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
மதுரை ஜெய்ஹிந்த்புரம் என்ற பகுதியில் காளிமுத்து என்பவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டதாக இருக்கிறது. இதனால் அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் சமீபத்தில் மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு காளிமுத்து தனது மனைவியிடம் தகராறு செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் ஆத்திர மிகுதியால் தனது 8 வயது மகளை கொலை செய்து உடலை ஒரு வாளியில் வைத்து பரணில் வைத்ததாக தெரிகிறது. 
 
அதன் பின்னர் அவர் போலீஸ் பயம் காரணமாக தற்கொலை செய்ய முயன்றதாகவும் சரியான நேரத்தில் அவரை போலீஸார் கைது செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

Edited by Mahendran