திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

மகளின் படிப்புச் செலவுக்கு எடுத்த சென்ற பணம்… தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்!

செய்யாறு அருகே விவசாயி ஒருவர் மகளின் கல்லூரி கட்டணம் கட்டுவதற்காக எடுத்த்ச் சென்ற பணத்தை பறக்கும் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் பறக்கும் படையினரை அமைத்துள்ளது. இதன் மூலம் ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் மிகப்பெரிய தொகை எல்லாம் கைப்பற்றப்பட்டு கருவூலத்தில் சேர்க்கப்படுகிறது.

செய்யாறு அடுத் துள்ள வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் கார் ஒன்றை நிறுத்தி விசாரித்த போது அதில் இருந்த நபர் உரிய் ஆவணங்கள் இன்றி கையில் 90,000 ரூபாய் வைத்திருந்தார். விசாரித்தபோது சென்னையில் படிக்கும் மகளின் கல்லூரிக் கட்டணம் கட்ட என சொல்லியுள்ளார். ஆனால் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.