புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 14 பிப்ரவரி 2022 (12:53 IST)

குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும் - முதல்வர் ஸ்டாலின்

குடும்பத்தலைவிகளுக்கான உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் என முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19 ஆம் தேதி  நடக்கவுள்ள நிலையில், இதற்கான அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

இ ந்  நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளாட்சியிலும் மலரட்டும் என்ற தலைப்பிலான  பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அதில்,  தேர்தல் அறிக்கையின்படி, குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும் என உறுதியளித்தார்.