1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 14 பிப்ரவரி 2022 (12:29 IST)

வெற்றிமாறன் - அமீர் இணையும் புதிய படத்தின் புதிய அப்டேட்....

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன். இவரது அடுத்த படத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம்,  வடசென்னை, அசுரன்  உள்ளிட்ட  படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் வெற்றிமாறன்.

இவர் இயக்குநரும் நடிகருமமான அமீர்  நடிப்பில் ஒரு புதிய படத்தை இயக்குவதாக ஏற்கனவே அறிவிப்புகள் வெளியான நிலையில், இப்படத்திற்கு இறைவன் மிகப் பெரியவன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு இயக்கு நர் வெற்றிமாறன் -  தங்கம் ஆகியோர் இணைந்து கதை எழுதியுள்ளனர்.  மேலும், இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்திற்குத்தான் வெற்றிமாறன் முதன் முதலாக யுவன்சங்கர்ராஜாவுடன் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.