லியோ பட FDFS காட்சிக்கு போலி டிக்கெட்..போலீஸில் புகார்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள படம் லியோ. இப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இந்த நிலையில், லியோ படத்தின் FDFS காட்சி டிக்கெட் போல, போலியாக தயாரித்து விற்பதாக மதுரை கோபுரம் திரையரங்கு சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், மதுரை செல்லூர் 50 அடி சாலையில் அமைந்துள்ள எங்களது கோபுரம் சினிமாஸ் திரையங்கினை கடந்த 2019ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து நல்ல முறையில் நடத்தி வருகிறோம். தற்போது நடிகர் விஜய் நடித்துள்ள "LEO" திரைப்படம் 19/10/2023 அன்று எங்களது திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்திற்கான முன்பதிவு டிக்கெட் விற்பனையினை இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம்.
இத்திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான (19/10/2023 9:00AM ) டிக்கெட் விற்பனை தற்போது வரை தொடங்கப்படவில்லை. இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் விஷ்வா என்பவர் 19/10/2023 9:00 AM காட்சிக்கானஇணையதள டிக்கெட்களை ஜெய்கிந்த்துபுரத்தை சேர்ந்த ரெங்கநாதன் என்பவரிடம் இருந்து அதிக விலைக்கு வாங்கியதாகவும், அந்த டிக்கெட்டின் உண்மைத்தன்மையினை திரையரங்க நிர்வாகத்திடம் உறுதிப்படுத்திக் கொள்ளவும் திரையரங்கிற்கு ரில் வந்தார். அவரிடம் இருந்து அந்த டிக்கெட்களை வாங்கி ஆய்வு செய்து பார்த்தபொழுது, அவை போலியான டிக்கெட் என தெரியவந்தது. இதன்மூலம் ஜெய்கிந்துபுரத்தை சேர்ந்த ரெங்கநாதன் என்பவர் இணையதள டிக்கெட் போன்றே போலியான டிக்கெட்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார் என்று தெரியவந்தது.
இதனால் திரையரங்க நிர்வாகத்தின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் திரையரங்கின் பெயரில் போலியான டிக்கெட்களை தயார் செய்து அதிக விலைக்கு விற்று மோசடி செய்து வரும் ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த ரெங்கநாதன் என்பவரின் மீது மீது காவல்துறை தகுந்ந நடவடிக்கை எடுக்குமாறு நிர்வாகத்தின் கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.