செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 6 டிசம்பர் 2022 (10:12 IST)

சென்சாரில் 250 கட்களை எதிர்கொண்ட தமிழ்ப் படம்!

ராமலட்சுமி தயாரிப்பில் இயக்குனர் வீர முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கிடுகு. இப்படத்தின் துணைத்தலைப்பாக சங்கிகளின் கூட்டம் என்ற இடம்பெற்றிருந்தது.

இப்படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியானது. இதில், இடம்பெற்றிருந்த ஒரு வசனம் “சாதியை ஒழிப்பதற்காக தாலி கட்டுவான், பின்பு மூட நம்பிக்கையை   ஒழிக்க தாலியை அறுப்பான்! இதுதான் திராவிட மாடல்” பெரும் பரபரப்பை ஏற்படுதியது.

இந்த நிலையில், இந்த வசனத்துக்கு எதிராக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் இப்போது இப்படம் சென்சார் செய்யப்பட்டுள்ள நிலையில் சுமார் 250 கட்களை சென்சார் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தின் கிளைமேக்ஸை நீக்கிவிட்டதாகவும், ஆனால் வேறு ஒரு க்ளைமேக்ஸ் காட்சியை எடுத்து வைத்திருந்ததால் அதை இணைத்துவிட்டதாக படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.