1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 17 மே 2020 (15:39 IST)

பள்ளி, கல்லூரி கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தளங்கள் செயல்பட தடை நீடிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது  கட்டமாக மேலும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்றுடன் மூன்றாவது கட்ட ஊரடங்கு முடியவுள்ள நிலையில், 4 வது கட்ட ஊரடங்கு முற்றிலும் புதியதாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் நாள்தோறும் கொரோனோ பாதிப்பால் மக்கள் அதிகம் பாதிப்படைந்து வருகின்றனர்.  குறிப்பாக தலைநகர் சென்னையில் பாதிக்கப்படுவோரொன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எனவே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி  4 வது கட்ட பொது ஊரடங்கை அறிவித்துள்ளார். அதில்  வரும் மே 31 ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இந்த ஊரடங்கின் போது தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த பொது ஊரடங்கு நீட்டிப்பு காலத்தில் திரையரங்குகள், பார்கள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள்  

பள்ளிகள், கல்லூரிகள் இயங்குவதற்கு  மறு உத்தரவு வரும் வரை இந்தத் தடை தடை தொடரும. அதேபோல் வழிபாட்டு தலங்களில் பொது மக்கள் வழிபாடு செய்யவும், மதம் சார்ந்த கூட்டங்களுக்கும் தடை உத்தரவு தொடர்கிறது  என முதல்வர் தெரிவித்துள்ளார்.