1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 28 ஜூலை 2021 (23:12 IST)

அரசுப்பேருந்து நிறுத்தி டிரைவரை வெட்ட புகுந்தவரால் பரபரப்பு.

மீண்டும் தலைதூக்கும் அரிவாள் கலாச்சாரம், கரூரில் அரிவாளுடன் அரசுப்பேருந்து நிறுத்தி டிரைவரை வெட்ட புகுந்தவரால் பரபரப்பு.
 
 
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன், ஆங்காங்கே தமிழக அளவில், வன்முறைகள் மற்றும் தடைகளை உடைத்து இருந்தால் அதற்கு கட்சி ரீதியாகவும், காவல்துறை சார்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. என்ன நிலையில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர்கள் அதிமுக எம்ஆர் விஜயபாஸ்கர், திமுக வி.செந்தில்பாலாஜி ஆகியோர் உள்ள ஊரில், அதுவும் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள திருமாநிலையூர் டூ லைட் ஹவுஸ் கார்னர் இடையே உள்ள புதிய அமராவதி பாலத்தில் திருச்சியிலிருந்து கோவை செல்வதற்காக கரூர் வந்த அரசுப் பேருந்தினை நடு பாலத்தில் பேருந்தை நிறுத்தி, பயணிகள் மத்தியில், டேய் வண்டிய நிறுத்துடா, என் அரிவாளுக்கு பதில் சொல்லி விட்டுச் செல்லி விட்டு செல் என்று கூறி 3 அடி நீளமுள்ள வீச்சரிவாள் கொண்டு  பயணிகள் பார்க்க டிரைவரை வெட்ட முற்பட்டுள்ளார். போதை தலைக்கு ஏறிய, அந்த இளைஞர், அந்த அரிவாள் கொண்டு ஓட்டுநர் மற்றும் பயணிகளை வெட்ட வர, உடனே திருச்சி நோக்கி சென்ற மற்றும் திண்டுக்கல் நோக்கி சென்ற அரசுப் பேருந்து டிரைவர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அந்த இளைஞரை துரத்தியதில் ஒருவர் அருவாளுடன் ஓடிவிட்டார். அப்போது, அவருடன் வந்த மற்றொருவர் வசமாக மாட்டிக் கொள்ள அவரை அடித்து துவைத்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்தை பார்த்த மற்ற இளைஞர்கள் நான்கு நபர்கள், நாங்கள் அப்படித்தான் காண்பிப்போம் என்றும் அதற்கு ஏன் அடிக்கிறாய் என்று கூறி, அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் களை தாக்க முயற்சித்தனர். பஞ்சாயத்து செய்ய வந்த நபர்கள்  அரசியல் பிரமுகரின் புகைப்படம் ஒட்டிய வாகனத்தில் வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவால் கலாச்சாரத்தால் கரூர் நகரில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது