1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Updated : புதன், 6 மார்ச் 2019 (14:04 IST)

மோடியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றாலும்... பாஜகவுக்கு ஆதரவு இல்லை- தனியரசு அதிரடி

அதிமுக தலைமையில் கூட்டணி இருப்பதால் தான் தங்கள் கட்சி இடம் பெற்றுள்ளதாகவும், அதற்கு மாறாக பாஜக தலைமையிலான கூட்டணி என்றால் அதனை நிராகரிப்பேன் என்று தனியரசு கூறியுள்ளார் 


 
பாஜக தலைமையிலான மிகப் பெரிய பிரம்மாண்டமான கூட்டணி தமிழகத்தில் இந்த முறை அமைக்க வேண்டும் என பிரதமர் மோடி விரும்பினார். இந்த கூட்டணியில் அதிமுக பாமக தேமுதிக மற்றும் இதர சிறிய கட்சிகள் இடம் பெற வேண்டும் என பாஜக தலைமை முடிவு செய்தது. இந்த தலைவர்களை எல்லாம் இன்று வண்டலூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் பங்கேற்க வைக்க வேண்டும் என பாஜக தலைமை முடிவு செய்தது. இதில் தேமுதிக மட்டும் இன்னும் கூட்டணியில் இடம் பெற வேண்டாமா என்று முடிவு செய்யவில்லை. இதனால் பிரதமர் மோடி பங்கேற்ற வண்டலூர் பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்கவில்லை. இந்நிலையில்  அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துவந்த மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் ஆகியோர் , பாஜக இடம்பெற்றுள்ளதால் அதிமுக கூட்டணியில் இடம் பெறுவதில் இருந்து மாறுபட்ட முடிவினை எடுத்துள்ளனர்.
 
கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், 
பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் பொதுக் கூட்டத்தில் தாம் பங்கேற்கப்போவதாகவும், ஆனால் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு இல்லை . அதிமுக தலைமையில் கூட்டணி இருப்பதால் தான் எங்கள் கட்சி இருக்கிறது.  அதேநேரம் மாறாக பாஜக தலைமையிலான கூட்டணி என்றால் அதனை எங்கள் கட்சி ஏற்காது என்றார்.