ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 18 டிசம்பர் 2020 (16:57 IST)

எடுங்கடா வண்டிய... பிரச்சாரத்திற்கு ரெடியான ஈபிஎஸ்!

சட்டமன்றத் தேர்தல் பரப்புரையை நாளை முதல் தொடங்கவிருப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 
 
இன்று சேலம் சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை நாளை முதல் எடப்பாடி தொகுதியில் இருந்து தொடங்கவிருக்கிறேன். நாட்கள் குறைவாக இருக்கின்ற காரணத்தால் தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளேன். சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜக உடனான கூட்டணி தொடர்கிறது.
 
மின் துறையை தனியார் மயமாக்கும் எந்த எண்ணமும் அரசிடம் இல்லை. விலை உயர்த்தப்பட்ட கேஸ் விலையை குறைக்க மத்திய அரசிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும். எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முழு நிலமும் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இன்னும் அதை எடுத்துக் கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.