செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (14:47 IST)

பென்னி குவிக் நினைவில்லம் இடிப்பா? – ஓபிஎஸ் – ஈபிஎஸ் கண்டனம்!

மதுரையில் கலைஞர் நூலகம் அமைக்க பென்னி குவிக் நினைவில்லம் இடிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவிப்பதாக ஈபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில் மதுரையில் உலக தரத்தில் பெரிய அளவில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என கூறியிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த நூலகத்தை மதுரையில் உள்ள கர்னல் பென்னி குவிக் நினைவில்லத்தை இடித்து விட்டு அங்கு கட்ட உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ள ஈபிஎஸ் – ஓபிஎஸ் “கலைஞர் நூலகம் அமைப்பதற்காக கர்னல் பென்னிகுவிக் நினைவில்லத்தை இடிப்பது கண்டிக்கத்தக்கது. மதுரையில் உள்ள பென்னிகுவிக் நினைவில்லத்தை இடிப்பது சரித்திரத்தை சிதைப்பதற்கு சமம். யாருக்கும் ஆட்சேபணை இல்லாத இடத்தில் கலைஞர் நூலகத்தை அமைக்க வேண்டும்” என்று அதில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.