ஆதாரம் கிடைக்காமலே ஊழல் பழி சுமத்தாதீங்க! – ஈபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டறிக்கை!
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது குறித்து அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீது கடந்த சில நாட்களாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட அவருக்க சொந்தமான 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த போது பதவியை தவறாக பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
இந்நிலையில் இதுகுறித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ள ஈபிஎஸ் – ஓபிஎஸ் “அதிமுக அமைப்பு செயளாலர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவது மக்கள் நலப்பணிகளில் திமுக அரசு கவனம் செலுத்தாமல், அதிமுகவினரை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறதோ என ஐயம் எழ செய்கிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சந்திக்க கழகம் எப்பொழுதும் தயாராகவே உள்ளது. ஆனால் ஆதாரம் ஏதுமின்றி உண்மை என்ன என்பதை கண்டுபிடிக்கும் முன்னரே ஊழல் பழி சுமத்துவது நியாயமற்றது” என்று தெரிவித்துள்ளனர்.