செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 18 டிசம்பர் 2018 (22:42 IST)

நான் பார்த்த முதல்வர்களில் எடப்பாடி தான் பெஸ்ட்: பிரபல நடிகை

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி முதல் தற்போதைய சூர்யா வரை மூன்று தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்த பெருமை பழம்பெரும் நடிகை சரோஜாதேவிக்கு உண்டு. இந்த நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற 'சென்னையில் திருவையாறு' தொடக்க விழாவில் நடிகை சரோஜாதேவி கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்த நிலையில் சிறப்புரை ஆற்றிய சரோஜாதேவி கூறியதாவது: நான் இதுவரை பார்த்த முதல்வர்களில் முகத்தில் எப்போதும் புன்சிரிப்போடு இருப்பவர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே. மற்றவர்கள் சிடு சிடுவென இருப்பார்கள். தமிழகத்திற்கு என்றைக்கும் எடப்பாடி பழனிசாமியே முதல்வராக இருக்க வேண்டும்

மேலும் எடப்பாடி அவர்கள் எம்.ஜி.ஆரை போல ஏழை மக்களுக்கு பல திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.