செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (15:02 IST)

ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு

EPS
இந்தியாவில் ஜி20 மாநாடு நடத்த இருக்கும் நிலையில் இந்த மாநாட்டில் பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ஜி20 மாநாட்டை நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது 
 
இந்த கூட்டத்திற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்  இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று டெல்லி செல்கிறார்
 
இந்த நிலையில் ஜி-20 மாநாட்டில் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இதனையடுத்து இன்று மாலை எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்வார் என்றும் நாளை நடைபெறவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva