Daily Horoscope
✕

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் விண்ணப்பம் பெற குவிந்த மாணவர்கள்..!

Written By Siva
Updated: செவ்வாய், 7 மே 2024 (07:18 IST)
நேற்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் நேற்று பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் பொறியல் படிப்புக்கு விண்ணப்பம் பெற முதல் நாளே ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆன்லைனில் குவிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
2024-25 ஆம் ஆண்டுக்கான பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நேற்று முதல் ஜூன் 6ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
https://www.teneaonline.org/ என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆன்லைன் மூலமும், இ சேவை மையங்கள் மூலமும் மாணவர்கள் நேற்று விண்ணப்பித்துள்ளனர். 
 
நேற்று ஒரே நாளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பொறியியல் படிப்பு படிக்க விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஒரு மாத காலம் கால அவகாசம் இருக்கும் நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொறியல் படிப்புக்கு மாணவர்கள் சேரும் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

இந்த வெற்றிக்கு விஜய் மட்டுமே காரணம்!. சத்யபாமா, மரகதம் குமரவேல் நெகிழ்ச்சி..

நீங்கள் தானே ஆளுநர் பதவியை ஆட்டுத்தாடியுடன் ஒப்பிட்டீர்கள்.. அன்பில் மகேஸ் வழக்கில் நீதிபதி கேள்வி..

மார்பிங் மற்றும் டீப்ஃபேக் வீடியோ விவகாரம்: கங்கனா ரனாவத் தொடுத்த வழக்கில் அதிரடி உத்தரவு...

சி.வி சண்முகம், வீரமணி, தங்கமணி ஆலோசனை!. பழனிச்சாமிக்கு ஆப்பா?..

எல்.நினோவின் கோர தாண்டவம்!.. வரலாறு காணாத வெப்பம் பதிவு!..

அடுத்த கட்டுரையில்
Show comments