காருக்குள் வைத்து கத்தி குத்து; பகீர் கிளப்பும் சிசிடிவி காட்சிகள்!

வியாழன், 17 செப்டம்பர் 2020 (13:42 IST)
கோவை டாடாபாத் பகுதியில் நடந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 
 
கோவை டாடாபாத் 9 வது வீதியை சேர்ந்தவர் ஜோய். இன்டீரியர் டெக்கரேசன் தொழில் செய்து வருபவர். கடந்த 14 ம் தேதி இரவு ஆர்.எஸ்.புரம் பகுதியில் தனது நண்பரிடம் 2 லட்ச ரூபாய் பணம் வாங்குவதற்காக வந்துள்ளார். 
 
பணத்தை வாங்கி விட்டு காரில் அமர்ந்த படி நண்பரிடமும் அவரது மனைவியிடமும் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது கையில் கத்தியுடன் வந்த இளைஞர் ஒருவர், ஜோயை கடுமையாக தாக்கினார். இதில் நிலை குலைந்த ஜோய், காரின் மற்றொரு பகுதியில் உள்ள கதவை திறந்து கீழே விழுந்தார். அப்போதும் விடாமல் வந்த அந்த நபர் ஜோயை கத்தியால் உடலின் பல பகுதிகளில் குத்தினார்.
 
இதில் பலத்த காயம் அடைந்த ஜோய் அலறியதை கேட்டு , பொது மக்கள் ஒன்று கூடினர். இதனையடுத்து இரு சக்கர வாகனத்தில் தயாராக இருந்த நபருடன் மர்ம நபர் ஒடினார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 
 
இந்நிலையில் ஜோய் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எல்லாம் காட்டு

திருச்செந்தூர் கோவிலில் லஞ்சம்!.. 2 காவலர்கள் டிஸ்மிஸ்!.. ஐயருக்கு பூஜை செய்ய தடை!...

லஞ்சம் வாங்கிய அர்ச்சகர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்த அமைச்சர் ரமேஷ்.. வெறும் மன்னிப்பு கடிதம் எல்லாம் கிடையாது...

தகுதியற்ற வேட்பாளர்களுக்கு வாரி வழங்கப்பட்ட வாய்ப்பு: காங்கிரஸ் தலைமை குறித்து ஜோதிமணி குற்றச்சாட்டு...

கவின் படுகொலைக்கு விஜய் ஏன் குரல் கொடுக்கலைன்னு கேட்டீங்களே.. குரல் கொடுக்குறது முக்கியம் அல்ல.. ஆக்சன் எடுக்குறதுதான் முக்கியம்...

மரண தண்டனையை தடுத்து நிறுத்திய மனித நேயம்!.. கேரள நபர் மீட்பு!...

அடுத்த கட்டுரையில்
Show comments