1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 25 செப்டம்பர் 2017 (13:47 IST)

கார்த்திக் சிதம்பரத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்; அமலாக்கத்துறை அதிரடி

கார்த்திக் சிதம்பரத்தின் நிரந்திர வைப்பு தொகை ரூ.90 லட்சம் மதிப்பிலான வங்கிகளின் கணக்குகள் அமலாக்கத்துறையினரால் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.


 

 
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற்ற விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக கார்த்திக் சிதம்பரம் உள்பட 5 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக கார்த்திக் சிதம்பரத்தை விசாரணைக்கு நேரில் ஆஜராக சிபிஐ உத்தரவிட்டது.
 
ஆனால் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தவருக்கு உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி கடந்த மாதம் கார்த்திக் சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது.
 
இந்நிலையில் தற்போது அமலாக்கத்துறை பிரிவினர் கார்த்திக் சிதம்பரத்தின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளனர். நிரந்திர வைப்பு தொகை ரூ.90 லட்சம் மதிப்பிலான வங்கிகளின் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.