1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 15 ஏப்ரல் 2018 (13:40 IST)

81 லட்சம் ஆதார் அட்டைகளை முடக்கிய மத்திய அரசு; உங்கள் ஆதார் அட்டையின் நிலை என்ன?

நாடு முழுவதும் சுமார் 81 லட்சம் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


 

 
மத்திய மாநில அரசுகளின் மானியம் பெறவும்; டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து பதிவுகளுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சுமார்  81 லட்சம் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
2016ஆம் ஆண்டு ஆதார் சட்டத்தின் விதிமுறைகள் 27 மற்றும் 28 ஆகிய பிரிவுகளின் கீழ் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட ஆதார் எண்கள் தனிநபர் ஒருவருக்கு இருந்தாலோ அல்லது பயோமெட்ரிக் மற்றும் ஆவணங்களில் முரண்பாடுகள் இருந்தாலோ அவர்களின் ஆதார் எண் முடக்கப்படும். 
 
இதன் அடிப்படையில் தற்போது ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளது. உங்களின் ஆதார் எண் ஆக்டிவாக உள்ளதாக என்பதை தெரிந்துக்கொள்ள ஆதார் இனையதளத்தில் சென்று சரி பார்த்து கொள்ளலாம்.