சசிகலாவை இடமாற்றம் செய்த அதிமுக அரசு; விஜயபாஸ்கர் சொத்துக்கள் முடக்கம் எதிரொலி


Abimukatheesh| Last Updated: புதன், 2 ஆகஸ்ட் 2017 (12:24 IST)
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை முடக்கிய நிலபதிவாளர் சசிகலா பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் பல ஆவணங்கள் சிக்கியது. அவரது தந்தை, சகோதரர், மனைவி என அனைவரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்.
 
இந்நிலையில் நேற்று திடீரென அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான புதுக்கோட்டையில் உள்ள 100 ஏக்கர் விவசாய நிலம் மற்றும் குவாரி முடக்கப்பட்டது. இந்த உத்தரவை புதுக்கொட்டை மாவட்ட நிலபதிவாளர் சசிகலா என்பவர் நிறைவேற்றியுள்ளார். இதனால் அவரை அரசு அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :