தமிழ் படிக்கும் வட மாநிலத்தவர்களின் குழந்தைகள்.. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!
வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் தமிழகத்தில் வாழ்ந்து வரும் நிலையில், அவர்களுடைய குழந்தைகளும் தற்போது தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். படிக்கும் போது, அவர்கள் தமிழ் பாடத்தையும் சேர்ந்து படித்து வரும் நிலையில், வட மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து நபர்களின் குழந்தைகளையும் அரசு பள்ளிகள் சேர்க்க ஊக்குவிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இருந்து ஏராளமான மக்கள் தமிழகத்தில் வேலை நிமித்தமாக குடியேறி வரும் நிலையில், அவர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். அவ்வாறு அரசு பள்ளியில் சேர்க்கும் போது, தமிழ் மொழியையும் அவர்கள் படிக்கின்றனர்.
இந்த நிலையில், வட மாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க ஊக்குவிக்க வேண்டும் என்று கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. வட மாநிலத்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை பயிற்றுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அதிகாரிகள் தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் வட மாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க ஊக்குவிக்க வேண்டும் என்றும், அரசு நடத்தும் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றால் உதவித்தொகை, பரிசுகள் மற்றும் இதர சலுகைகள் அளிக்கப்படும் என அவர்களுக்கு உற்சாகமூட்ட வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Mahendran