திங்கள், 20 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 20 ஜனவரி 2025 (17:53 IST)

சீமான் ஈழம் சென்றது உண்மைதான், ஆனால் அவர் எடுத்த புகைப்படம்.. கொளத்தூர் மணி

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படத்தை நான் தான் எடிட் செய்து கொடுத்தேன் என இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்து இருந்த நிலையில் பிரபாகரனை சீமான் சந்திக்கவே இல்லை என்ற தகவல் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. இது குறித்து கொளத்தூர் மணி அவர்கள் கூறிய போது ’சங்ககிரி ராஜ்குமார் கூறிய எடிட்டிங் என்ற தகவல் உண்மையாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.

சீமான் ஈழம் சென்ற இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தான் இந்த புகைப்படம் வெளியானது என்றும் அப்போது நாங்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் சீமான் ஈழம் சென்ற போது அங்கிருந்தவர்கள் அவர் வந்து சென்ற செய்தியை மட்டும் தான் சொன்னார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

எனக்கு கிடைத்த தகவலின் படி சீமான் ஈழம் சென்று வந்தது உண்மைதான் என்றும் ஆனால் மிகவும் குறைவான நேரம் மட்டுமே பிரபாகரனை சந்திக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது என்றும் பிரபாகரனுடன் பலரும் திறந்த வெளியில் தான் புகைப்படம் எடுத்து உள்ளார்கள் என்றும் தனியாக ஸ்டுடியோ போன்று இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து சீமான் ஈழம் சென்றது உண்மைதான் என்பது கொளத்தூர் மணியின் பேட்டியில் இருந்து தெரிய வந்துள்ள நிலையில் பிரபாகரன் உடன் அவர் எடுத்த புகைப்படம் உண்மைதானா என்ற கேள்வி தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran