1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold Price Surge: A Sudden Increase in Chennai

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்தை நெருங்கியதால் அதிர்ச்சி..!

Gold
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை திடீரென உயர்ந்துள்ளதோடு, ஒரு சவரன் 60 ஆயிரத்தை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இன்று ஒரு கிராம் 60 ரூபாயும், ஒரு சவரன் 480 ரூபாயும் உயர்ந்துள்ளது தங்க நகை பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் 60 ரூபாய் உயர்ந்து    7,450 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 480 ரூபாய் உயர்ந்து விலை ரூபாய்   59,600 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,116 எனவும் ஒரு சவரன் ரூபாய் 64928 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 104.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  104,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
மகளின் ஆபாச புகைப்படங்கள் விற்பனை செய்த தாய், தந்தை: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!