தென்மேற்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை..!
தென்மேற்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாக்கியதை அடுத்து, தமிழகத்திற்கு மழை குறித்து எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
தெற்கு கேரளா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டலத்தில் சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று அதாவது, ஜனவரி 17ஆம் தேதியன்று வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளிலும், நாளை தமிழக கடலோரப் பகுதிகளிலும் சில உள் மாவட்டங்களிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்றும் நாளையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அந்தப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edited by Siva