Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூஸ்டர் டோஸ் போட தகுதியானவர்கள் யார் யார்?

Written By Sugapriya Prakash
Updated: திங்கள், 10 ஜனவரி 2022 (13:29 IST)
பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள் யார் என்ற விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள். 

 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி அவர்கள் ஜனவரி 10 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் என அறிவித்திருந்தார். இன்று முதல் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதல் கட்டமாக மருத்துவர்கள் முன் களப்பணியாளர்கள் செவிலியர்கள் ஆகியோருக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் அதன் பின்னர் படிப்படியாக பொதுமக்களுக்கு செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள் யார் என்ற விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்... 
 
1. 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளிகள், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள்.
 
2. இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதங்கள் முடிவடைந்தவர்கள் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியும்.
 
3. முதல் இரண்டு டோஸ் எந்த தடுப்பூசி போடப்பட்டதோ தற்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் அதே நிறுவன டோஸ்தான் போடப்படும்.

எல்லாம் காட்டு

விஜய் மீது அவதூறு!.. ஆ.ராசா, சேகர் பாபு மீது வழக்குப்பதிவு!.. கைது செய்யப்படுவார்களா?..

திமுகவின் முப்பெரும் விழா திடீர் ஒத்திவைப்பு.. என்ன ஆச்சு முக ஸ்டாலினுக்கு?

முக ஸ்டாலினுக்கு உடல் நலக்குறைவு!.. துரைமுருகன் சொன்ன தகவல்...

முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு.. ஆ ராசா, சேகர் பாபு மீது வழக்குப்பதிவு.. கைது நடவடிக்கையா?

ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தல்.. ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்ற பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள்...

அடுத்த கட்டுரையில்
Show comments