யானை தாக்கி இருவர் பலி எதிரொலி: பக்தர்களுக்கு ஆசி வழங்க தடை..!
திருச்செந்தூரில் யானை தாக்கியதால் பாகன் உள்பட இரண்டு பேர் பலியான சம்பவத்தை அடுத்து, யானை பக்தர்களுக்கு ஆசி வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை, நேற்று யானைப்பாகன் மற்றும் அவருடைய உறவினர் ஆகிய இருவரையும் தாக்கிய சம்பவத்தில் இருவரும் பலியாகினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் பராமரிக்கப்படும் யானை அருகே பக்தர்கள் செல்லவும், ஆசி வாங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், நேற்று மாலை முதலே யானையை கூண்டிற்குள் பூட்டி வைக்கப்பட்டுள்ளதாகவும், யானைப்பாகன் மட்டுமே உணவினை வழங்கும் நேரத்தில் மட்டும் உள்ளே சென்று விட்டு, அதன் பிறகு வெளியில் இருந்து யானை பராமரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. பக்தர்கள், யானையை கூண்டிற்கு வெளியே நின்று மட்டுமே பார்க்கலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து கோயில்களிலும் இந்த நடைமுறை வாய்மொழி உத்தரவாக செயல்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
Edited by Mahendran