வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 19 நவம்பர் 2024 (08:09 IST)

நீண்ட நேர செல்பியால் ஆத்திரமானதா திருச்செந்தூர் யானை.? 2 பேர் பலியான சம்பவத்தில் விசாரணை..!

திருச்செந்தூர் கோவில் யானை தாக்கிய இரண்டு பேர் பலியான சம்பவத்தில் முதல் கட்ட விசாரணையில் யானை அருகே நீண்ட நேரம் செல்பி எடுத்ததால்தான் அந்த யானை ஆத்திரமடைந்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை நேற்று திடீரென கோபமடைந்து யானைப்பாகன் மற்றும் யானைப்பாகனின் உறவினர் ஆகிய இருவரையும் தாக்கியதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில் இது குறித்து விசாரணை நடந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவில் யானை உடன் பாகனின் உறவினர் சிசுபாலன் என்பவர் நீண்ட நேரம் செல்பி எடுத்து விட்டு யானையை தொட்டதாக தெரிகிறது. புதிதாக ஒருவர் தன்னை தொடுவது பிடிக்காததால் தெய்வானை யானை அவரை கால் மற்றும் தும்பிக்கையால் தாங்கியுள்ளது.

உடனே அவரை காப்பாற்ற யானைப்பாகன் வந்தபோது, யானை பாகனை தெரியாமல் தாக்கிவிட்டது என்பதை உணர்ந்து அவரை எழுப்ப முயன்றது. ஆனால் அவர் எழுந்திருக்காததால், மீண்டும் ஆதிக்கத்தில் சிசுபாலனை தாக்கியதாக திருச்செந்தூர் வனச்சரக அலுவலர் கவின் தெரிவித்துள்ளார்.

80 வருடத்தில் இப்படி நடந்ததே இல்லை என்றும், செல்ல பிள்ளை விளையாட்டு பிள்ளையாகத்தான் தெய்வானை யானை இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


Edited by Siva