திருச்செந்தூரில் கந்தசஷ்டி: நீண்ட வரிசையில் பக்தர்கள்.. கடற்கரையில் பெருங்கூட்டம்..!
திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா கடந்த ஒரு வாரமாக சிறப்பாக நடந்து வரும் நிலையில், இன்று மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெற உள்ளது. இதை பார்ப்பதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்து உள்ளதால் திருச்செந்தூர் கடற்கரையில் பெரும் கூட்டம் காணப்படுகிறது.
மேலும், கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நுழைவாயில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதாகவும், அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் செய்துள்ளதாகவும், தன்னார்வ ஆர்வலர்கள் பக்தர்களுக்கு உதவி செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Edited by Mahendran