சென்னையில் 11 மணிக்குள் 80 சதவீத பகுதிகளுக்கு மின் விநியோகம் வழங்கப்படும்… மின்சாரத்துறை தகவல்!
சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக பல பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. தேவையில்லாத விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு இந்த மின் துண்டிப்பு நடைபெற்றது. இப்போது மழை குறைந்துள்ள நிலையில் சில பகுதிகளில் மின்சார விநியோகம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இப்போது மீட்புப் பணிகளை சென்னை மாநகராட்சி துரிதப்படுத்தி வருகிறது. இப்போது பிரதான சாலைகளில் விழுந்திருந்த மரங்கள் முழுவதும் அகற்றப்பட்டு விட்டதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதுபோல உள் பகுதிகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணி இன்று காலை செய்து முடிக்கப்படும் என அறிவித்துள்ளது. அதே போல தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற நெய்வேலியில் இருந்து ராட்சச பம்புகள் வரவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று காலை 11மணிக்குள் 80 சதவீத பகுதிகளுக்கான மின்சார விநியோகம் கொடுக்கப்படும் என மின்சார துறை தகவல் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பல இடங்களில் படிப்படியாக மின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.