தொடர்புடைய செய்திகள்
- சென்னை தொகுதி எம் எல் ஏக்கள் எல்லாம் வெளிய வாங்க… நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோ!
- கோயம்பேடு மற்றும் தாம்பரம் பகுதிகளில் மீண்டும் போக்குவரத்து சேவை தொடக்கம்!
- சென்னை வெள்ள பாதிப்பு… மீட்பு பணிகளுக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து தூய்மை பணியாளர்கள் வருகை!
- சென்னையில் இருந்து 190 கிமீ தூரத்தில் மிக்ஜாம் புயல்… 9 கிமீ வேகத்தில் நகர்வு!
- நெல்லூர் அருகே கரையைக் கடக்க தொடங்கிய மிக்ஜாம் புயல்!
மிக்ஜாம் புயல் நிவாரணத்துக்காக 10 லட்சம் நிதியுதவி… நடிகர்கள் சூர்யா கார்த்தி அறிவிப்பு!
தொடர்ந்து 30 மணிநேரத்துக்கும் மேலாக கோரத்தாண்டவம் ஆடிய மிக்ஜாம் புயல் இப்போது ஆந்திராவின் நெல்லூர் அருகே மையம் கொண்டுள்ளது. நேற்று முழுவதும் பெய்த பெருமழையால் சென்னையின் சில பகுதிகளில் 40 செமீ அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. ஆந்திராவில் இன்று முற்பகல் முழுவதுமாக இந்த புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றிரவு முதல் மழை குறைந்து வருவதால் சென்னையில் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் நிவாரணப் பணிகளுக்காக நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் 10 லட்ச ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளனர்.
மேலும் தங்கள் ரசிகர் மன்றத்தை சார்ந்தவர்கள் மூலமாக நிவாரணப் பொருட்கள் வழங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
