திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 3 நவம்பர் 2017 (16:53 IST)

சாலையில் எரிந்த மின்கம்பி: ஆவடியில் பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னை கொடுங்கையூரில் மின்வயரை தவறுதலாக மிதித்ததால் இரண்டு சிறுமிகள் பலியான விவகாரத்தில் பொறியாளர்கள் உள்பட எட்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதை அடுத்து மின்வாரிய ஊழியர்கள் விறுவிறுப்பாக பராமரிப்பு பணிகளை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.


 


இந்த நிலையில் சென்னையை அடுத்த ஆவடியில் திடீரென மின்வயர் ஒன்று சாலையில் அறுந்துவிழுந்து தீப்பிடித்ததால் அந்த பகுதியில் வழியாக செல்பவர்களும் வாகன ஓட்டிகளும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் கிடைத்தவுடன் மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மின் இணைப்பை துண்டித்து தற்போது பழுது பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆவடியில் உள்ள டிரான்ஸ்பார்மர் வெடித்ததாக ஒரு வதந்தி வீடியோ வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால் உண்மையில் இந்த வீடியோ கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் டிரான்ஸ்பார்மர் வெடித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ என்று தற்போது தெரியவந்துள்ளது.